·
தாய்ப்பால் சுரப்பு நீங்க_மல்லிகைபூவை
கைப்பிடியளவு எடுத்து அரைத்து பால் ஊறும் மார்புப்பகுதியில் வைத்துக் கட்ட தாய்ப்பால்
சுரப்பு நீங்கும்.3நாட்கள் கட்டலாம்.
·
ஒட்டுவாரொட்டி புண் நீங்க_ஒட்டிய
புண்ணை ஒடுக்க மல்லிகைப்பூ என்பது பழமொழி.ஒட்டுவாரொட்டி புண் மீது மல்லிகைப்பூவை அரைத்து
பூசினால் புண் அகன்று விடும்.
·
எண்ணெய் வடிந்த முகம்,முகப்பரு உள்ளவர்கள்-மல்லிகைப்பூவை
அரைத்து முகத்தில் பூசிய பின் கடலை மாவைக்கொண்டு முகம் கழுவினால் அவர்களின் குறை நீங்கி
விடும்.
· வீக்கம் நீங்க_வீக்கம் உள்ள இடத்தில்
மல்லிகை பூவை அரைத்து பற்று போடவும்.
·
வாய்ப்புண் தீர_மல்லிகைப்பூவை வாயிலிட்டு
மென்று துப்பவும்.
·
தலைவலியா?_மல்லிகைப்பூவின் மணத்தை முகரலாம்
அல்லது தலையணைக்கடியில் மல்லிகை மலரைத்தூவி
படுத்தாலும் தலைவலி நின்று விடும்.
·
விரை வீக்கத்துக்கு-மல்லிகைப்பூவை
தேங்காய்ப்பூ சேர்த்து லேசாக வதக்கி விரை வீக்கத்தின் மீது வைத்துக் கட்டினால் குணம்
கிடைக்கும்.
·
மண்டைக்குடைச்சல்,ஒற்றைத்தலைவலிக்கு_பவழ மல்லிகைப்பூவுடன்
7,8 மிளகைச் சேர்த்து அம்மியில் விழுதுப்போல் அரைத்து தலைக்குத் தேய்த்து குளிப்பதன்
மூலம் இப்பிரச்சினைகள் நீங்கப் பெறும்.
02.தூதுவளைப்பூ
·
உடல் வலுவடைய_தூதுவளைப்பூக்களை நெய்விட்டு
வதக்கி தயிர் சேர்த்து பச்சடி செய்து சாப்பிட ருசியாக இருக்கும்.உடலும் வலுவடையும்.
·
இளமை காக்க_தூதுவளைப்பூக்கள் தினம்
இரண்டு எடுத்து மென்று சாப்பிட்டு வந்தால் உடல் பளபளப்புத் தோற்றம் பெற்று இளமைத் திரும்பும்.
·
முக அழகு வேண்டுமா?_தூதுவளைப்பூக்கள்
15 எடுத்து 200மி.லீ நீரில் போட்டு பாதியாக சுண்டக் காய்ச்சி பாலும் சர்க்கரையும் கலக்கிப்
பருகினால் முக அழகு கிடைக்கும்.
·
நரம்புகள் இறுக_தூதுவளைப்பூக்களைச் சேகரித்து
நிழலில் உலர்த்தி பத்திரப்படுத்துக.ஒரு டீஸ்பூன் பூவை காய்ச்சிய பசும்பாலில் போட்டு
சிறிது சர்க்கரை சேர்த்து இரவில் ஒரு வேளை மட்டும் அருந்தவும்.இதனால் நரம்புகள் இறுகும்.உடல்
உறுதி பெறும். ஆண்மை கிடைக்கும்.
03.ரோஜாப்பூ
·
வெள்ளைப்படுதல்_ரோஜா இதழ்களைப் பச்சையாக
காலை மாலை ஒரு கைப்பிடியளவு சாப்பிட பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்போக்கு நிற்கும்.
·
சீதபேதி,மூலச்சூடு,வயிற்றுக்கடுப்பு_முன்பு
ரோஜா இதழ்களை கைப்பிடியளவு காலை மாலை சாப்பிடவும்.
·
மூக்கடைப்பு_ரோஜா மலரை முகர்ந்து வந்தாலே
மூக்கடைப்பு குணமாகிவிடும்.
·
தலைவலி_ரோஜாப்பூ இதழ்களைக் கசக்கி அல்லது
நசுக்கி சாறு எடுத்து மூக்கில் பிழிந்தால் தலைவலி நீங்கி விடும்.
·
வயிறு சுத்தமாக_ரோஜா இதழ்களை மென்று விழுங்கவும்.
No comments:
Post a Comment