· மல்லிகைப்பூக் கசாயம் செய்வது எப்படி?
கைப்பிடியளவு மலர்ந்த மல்லிகைப்பூக்களை சட்டியில் போட்டு 200மி.லீ நீர் விட்டு
கொதிக்க வைத்து 100மி.லீ ஆக சுண்டக்காய்ச்சி வடிகட்டினால் கசாயம் தயார்.வேளைக்கு 2 அவுன்ஸ் வீதம் காலை,மாலை 4 நாட்கள் சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு கோளாறு,வயிற்றுவலி என்பன குணமடையும்.
·
ரோஜாப்பூ குல்கந்து தயாரிப்பது எப்படி?
2. 3மடங்கு
கற்கண்டு சேர்த்து கல் உரலில் 2 சரக்குகளையும் போட்டு இடிக்கவும்.
3. லேகிய
பதத்துக்கு வரும் போது எடுத்து கண்ணாடி ஜாடியில் போட்டு,லேகியத்தின் அளவில் மூன்றில்
ஒரு பங்கு சுத்தமான தேன் ஊற்றி கலக்கவும்.
4. 5நாள்
வெயிலில் வைத்து கிளறி எடுக்கவும்.
5. இதுவே
ரோஜாப்பூ குல்கந்து ஆகும்.
6. இக்குல்கந்தை
சாப்பிடும் போது சீதபேதி,மலச்சிக்கல் நீங்கும்.இரத்தம் சுத்தமாகும்.உடலுக்கு போஷாக்கு
கிடைக்கும்.
குறிப்பு- ரோஜா
குல்கந்தை சிறுவர்களுக்கு அரை தேக்கரண்டியளவும் பெரியவர்களுக்கு ஒரு தேக்கரண்டியளவும்
காலை,மாலை கொடுக்கலாம்
· பன்னீர் _ ரோஜா பூக்களிலிருந்து தான் பன்னீர் என்ற உயர்ரக வாசனை தண்ணீர் தயாரிக்கப்படுகின்றது.
கண்கள் சிவந்து எரிச்சல் இருக்கும் சமயம்
2 சொட்டு பன்னீர் கண்களில் விட்டால் எரிச்சல் தணியும், சிவப்பு மாறும், கண் சம்பந்தப்பட்ட
பிணிகள் நீங்கும்.
பல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு பன்னீரைப்
பஞ்சில் நனைத்து பல்லில் வைக்கலாம்.
வாய்ப்புண் , வாய்நாற்றம் இவைகளுக்கு பன்னீரால்
வாய் கொப்பளித்தால் குணம் கிட்டும்.
குளிக்கும் நீரில் பன்னீரைக் கலந்து குளிக்கும்
போது உடம்பிலுள்ள வியர்வை நாற்றம், சரும நோய்கள் நீங்கும்.
முகச்சவரம் செய்து முடித்ததும் முகத்தை
கழுவி விட்டு பன்னீர் கொண்டு முகத்தில்
தடவினால் குளிர்ச்சியாகவும் இதமாகவும் இருக்கும்
· ரோஜா சர்பத் தயாரிப்பது எப்படி?
1. தேவையான
பொருட்கள்- நீர் 1லீற்றர் ரோஜா இதழ் 750 கிராம்
சர்க்கரை 700 கிராம்
பன்னீர் 3 அவுன்ஸ்
2. செய்முறை
1 லீற்றர் கொதிக்கும் நீரில் 750 கிராம் ரோஜா இதழ்களைப் போட்டு கிளறவும்.ஆறியவுடன் நன்றாக கிளறவும்
.
இதை இரவு நேரத்தில் செய்து 12 மணி நேரம்
ஊறவிடவும்.
மறுநாள் காலை 9 மணியளவில் திறந்து சுத்தமான
கைகளால் ரோஜா இதழ்களைப் பிசைந்து குழம்பு போல் ஆக்கவும்.
வேறு ஒரு பாத்திரத்தில் 300 மி.லீற்றர்
நீர்விட்டு அதில் 700 கிராம் சர்க்கரை போட்டு காய்ச்சவும்.
நீர் நன்றாகக் கொதித்து சர்க்கரை இளகி
பாகு பதத்திற்கு வந்ததும் பாகை முன்பு வைத்துள்ள ரோஜா இதழ் குழம்பில் ஊற்றி மறுபடியும்
காய்ச்சவும்.
பாகு சுண்டி தேன் பதத்திற்கு வரும்போது அதனுடன்
3அவுன்ஸ் பன்னீர் கலந்து கிளறி ஆற வைத்து கண்ணாடி பெட்டிக்குள் பத்திரப்படுத்தவும்.
இதில் 2 தேக்கரண்டி அளவு எடுத்து அதை
தேவையான நீர் சேர்த்து பருகலாம் அல்லது காய்ச்சிய பாலில் கலந்து பருகலாம்.
ரோஜா சர்பத் பருகுவதால் உடல் உஷ்ணம்
சமநிலையில் அமையும்.
இரத்தத்தின் இயல்பு கட்டிக்காக்கப்படும்.
களைப்பை நீக்கும்.இரத்த விருத்திக்கு
பயனுள்ள டானிக்.



No comments:
Post a Comment